குடியரசுத் தலைவர் தேர்தலில் முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா முடிவு..!

0 967
குடியரசுத் தலைவர் தேர்தலில் முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா முடிவு..!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், யாரை ஆதரிப்பது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முர்முவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என சிவசேனா எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக பேசிய சஞ்சய் ராவத், திரௌபதி முர்முவை ஆதரிப்பது என்பது பாஜகவை ஆதரிப்பதாக அர்த்தமல்ல என்றும் சிவசேனாவின் முடிவை உத்தவ் தாக்கரே அறிவிப்பார் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments