டீக்கடையில் டீ குடிக்க வந்த கவுன்சிலரின் கணவரை மடக்கி சரமாரியாக வெட்டிக்கொலை..!

0 3169
டீக்கடையில் டீ குடிக்க வந்த கவுன்சிலரின் கணவரை மடக்கி சரமாரியாக வெட்டிக்கொலை..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே டீக்கடைக்கு வந்த ஆறுமுகநேரி பேரூராட்சி கவுன்சிலரின் கணவரை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடார் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளரான இராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார், இவரது மனைவி நிர்மலா தேவி ஆறுமுகநேரி பேரூராட்சியின் 14 வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அம்மன்புரம் அருகே சாலையோர டீக்கடைக்கு பைக்கில் வந்த சரவணக்குமாரை வழிமறித்த மர்மநபர்கள், அவரை மடக்கி பிடித்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றியதோடு கொலைக்கான காரணம் குறித்தும், கொலை செய்துவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பல் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments