இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இளம்பெண் தன்னை காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது.!

0 1167

கோவையில், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இளம்பெண் தன்னை காதலிக்க மறுத்ததால், ஆத்திரத்தில் அவர் பணிபுரியும் இடத்துக்கே சென்று கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

குனியமுத்தூரைச் சேர்ந்த இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சேலத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவனுடன் 2 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளார். 2 மாதங்களுக்கு முன், தினேஷ் அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார்.

காதலை ஏற்க மறுத்த இளம்பெண் தினேஷின் செல்போன் எண்ணை பிளாக் செய்ததோடு, பேசுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், இளம்பெண் பணிபுரியும் கார் ஷோரூமுக்கு சென்று தகராறில் ஈடுபட்டதோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் தலை, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் தினேஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments