பாகிஸ்தானில் பெய்த தொடர் கனமழையால் 24 குழந்தைகள் உட்பட 62 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் பெய்த தொடர் கனமழையால் 24 குழந்தைகள் உட்பட 62 பேர் உயிரிழப்பு..!
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழையால் 24 குழந்தைகள் உட்பட 62 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளம் மற்றும் இடிபாடுகள் உள்ளிட்டவற்றில் சிக்கி 48 பேர் காயமடைந்திருப்பதாகவும், 670-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கராச்சியில் கனமழையால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலையில் கொறங்கி, சடார், நிப்பா உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.
சமீபத்திய பருவமழையால் 339 அடி கொள்ளளவு கொண்ட ஹப் அணையின் நீர் மட்டம் 334 அடியை எட்டியுள்ளது.
Comments