"அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும்" - இபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு.!

0 830

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி, அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நேற்று மோதிக் கொண்டதை அடுத்து, வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். அலுவலகத்தில் யாருக்கு உரிமை என, ஜூலை 25 ஆம் தேதி விளக்கம் அளிக்குமாறு இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் முறையீடு செய்தார். மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments