பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தை கடத்தல்.!

0 960

நெல்லை, ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்காவிற்கு தொழுகைக்காக வந்து தங்கியிருந்த தம்பதியின் பெண் குழந்தையை நள்ளிரவில் மர்ம நபர் கடத்திச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கடையநல்லூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது - நாகூர் மீரா தம்பதி தங்களது இரண்டரை வயது பெண் குழந்தையுடன் பள்ளிவாசலுக்கு வந்தனர்.

நேற்றிரவு குழந்தையுடன் அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் படுத்துறங்கிய நிலையில், காலையில் குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகாரளித்தனர். சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, மர்ம நபர் குழந்தையை தூக்கிச் சென்றது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments