தேசிய கொடியின் மூவர்ணத்தை வெளிப்படுத்தும் கடற்கரை புகைப்படம்.. மத்திய அரசின் டிவிட்டர் பக்கத்தில் வெளியீடு..!

0 1094
தேசிய கொடியின் மூவர்ணத்தை வெளிப்படுத்தும் கடற்கரை புகைப்படம்.. மத்திய அரசின் டிவிட்டர் பக்கத்தில் வெளியீடு..!

நாடு 75 ஆவது விடுதலை பெருவிழாவை கொண்டாடும் வேளையில், இயற்கையே இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்தை வெளிப்படுத்திய அபூர்வ புகைப்படத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கடற்கரையில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில், சூரிய உதயம் செந்நிறத்தில் வெளிப்பட, வெள்ளை நிறத்தில் கடல்அலைகளின் நுரைப்பொங்க, பச்சை நிறத்தில் கடல் பாசிகள் காணப்படுகின்றன.

தேசிய கொடியில் உள்ள மூவர்ணத்தை இந்த இயற்கை காட்சிகள் பிரதிபலிக்கின்றன. இந்த அற்புத புகைப்படத்தை மத்திய அரசு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments