கொட்டித்தீர்த்த கனமழை : கரைபுரண்டு ஓடும் மழை வெள்ளத்தில் கயிறு கட்டி ஆற்றை கடக்கும் பள்ளி மாணவர்கள்..!

0 1436
கொட்டித்தீர்த்த கனமழை : கரைபுரண்டு ஓடும் மழை வெள்ளத்தில் கயிறு கட்டி ஆற்றை கடக்கும் பள்ளி மாணவர்கள்..!

வட கிழக்கு மாநிலமான ஒடிசாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கஞ்சம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கயிறு கட்டி ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

பத்ராபூர் பகுதியில் சுமார் 15 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அன்றாட தேவைக்காக ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலையில், பாலம் இல்லாததால் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனால் ஆற்றின் இருபுறத்திலும் உள்ள மரங்களில் கயிறு கட்டி ஆபத்தான நிலையில் ஆற்றை கடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆற்றைக் கடப்பதற்கு வசதியாக உடனடியாக பாலம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments