சிலியில் கடும் பனிப்புயல்.. பனியில் சிக்கிக் கொண்ட 250 வாகனங்கள் - 300 பேர் மீட்பு..!

0 993
சிலியில் கடும் பனிப்புயல்.. பனியில் சிக்கிக் கொண்ட 250 வாகனங்கள் - 300பேர் மீட்பு..!

சிலி நாட்டில் மத்தியப் பகுதியில் கடந்த வாரம் பெய்த கடும் பனிப்புயலில் சிக்கி இருந்த ஏராளமான டிரக்குகளை காவல்துறையினர் மீட்டனர்.

Valparaiso பகுதியில் Los Caracoles மலைச்சரிவில் 250 வாகனங்கள் சிக்கிக் கொண்டதாகவும் அதில் இருந்த 300பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Andes மலைகளில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் 23மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பாதுகாப்பு கருதி அர்ஜென்டினா-சிலி இடையேயான பாதையை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments