ஓ.பன்னீர் செல்வத்துடன் வந்த கும்பல் தாக்கிய நிலையில் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை - அதிமுக தொண்டர்கள் குற்றச்சாட்டு

0 1611

ஓ.பன்னீர் செல்வத்துடன் வந்த கும்பல் தாக்கிய நிலையில் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று அதிமுக தொண்டர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலையில் மிக குறைவான போலீசாரே பாதுகாப்பில் ஈடுபட்டதாக கூறிய தாக்குதலில் காயமடைந்த அதிமுக அம்மா பேரவை வட்ட செயலாளர் லோகநாதன், அலுவலகத்தை ஒட்டிய உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களையும் பன்னீர்செல்வம் கும்பல் விரட்டி,விரட்டி தாக்கியது என்றார்.

பன்னீர் செல்வமும், அவருடன் வந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்ட பின்னரே போலீசார் வந்ததாக கூறிய அவர், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விரட்டாமல், காயமடைந்தவர்களையும் போலீசார் விரட்டி அடித்ததாக கூறினார்.

அதிமுக தரப்பில் முன்கூட்டியே புகார் அளிக்கப்பட்டநிலையிலும், காவல்துறை பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டியதாக லோகநாதன் குற்றம் சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments