அதிமுக பொதுச்செயலாளருக்கு கட்சியில் உள்ள அதிகாரங்கள்.!

0 1345

அதிமுகவில் பொதுச் செயலாளரின் அதிகாரங்கள், பணிகள் குறித்துச் சட்ட விதிகளில் பல்வேறு திருத்தங்களைச் செய்து பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

அதிமுகவின் பொதுச்செயலாளர் கட்சியின் நிர்வாக முறையிலான அனைத்துப் பொறுப்புகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பார். நிர்வாக வசதிக்காகப் பொதுக்குழு உறுப்பினர்களில் இருந்து துணைப் பொதுச்செயலாளர்களையும் பொருளாளரையும் நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு.

அவைத்தலைவர், பொருளாளர், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நியமன உறுப்பினர்களைக் கொண்டு செயற்குழுவைப் பொதுச்செயலாளரால் மட்டுமே அமைக்க முடியும்.

செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டுதல், உட்கட்சித் தேர்தலை நடத்துதல், வரவு செலவுக் கணக்கை ஆராய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார். அதிமுகவின் சட்ட விதிகளுக்கு மாறாக நடக்கும் நிர்வாகிகளை நீக்குவதற்கோ, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கோ பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக் கோரும் படிவத்தில் பொதுச்செயலாளர் மட்டுமே கையொப்பமிட முடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments