ஓ.பன்னீர்செல்வத்தின் செயலுக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம்.!

0 1584

அதிமுக தலைமையகத்தைக் கைப்பற்ற முயன்று வன்முறையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்குப் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வாயிற்கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அப்போது மோதல் ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர்.

 

அதிமுக பொதுக்குழுவில் பேசிய இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரவுடிகளோடு இணைந்து வன்முறையை கையிலெடுத்த ஓபிஎஸ் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார்.

 

ஓ.பன்னீர்செல்வத்தின் செயலுக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments