பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்.!

0 1081

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்டவனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

வாட்டர்டேங்க் பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான வெங்கட்ராமன் என்பவர் மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்தபடி தனது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை நேற்று தனது மொபைல் போன் மூலம் ஆய்வு செய்த போது அதிகாலை 2.20 மணியளவில் அவை ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்து வீட்டை பார்க்க வைத்த போது திருட்டு அரங்கேறியிருப்பது உறுதியானது. தனது வீட்டில் ஏற்கனவே 2 முறை திருட்டு நடந்திருப்பதால் வெங்கட்ராமன் முன்னெச்சரிக்கையாக பணம், நகை எதையும் அவர் வைத்திருக்கவில்லை என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments