அதிமுக முன்னாள் உறுப்பினர் ஓபிஎஸ், அத்துமீறி உள்ளே நுழைந்ததோடு, ரவுடிகளை அழைத்து வந்து தாக்கியது கண்டனத்திற்கு உரியது - இபிஎஸ்

0 2416

அதிமுக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற மோதலின் போது மீன்பாடி வண்டியில் கற்களை கொண்டு வந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கியதாகவும், சொந்த கட்சியின் தொண்டர்களையே தாக்க ஓ.பன்னீர் செல்வம் எப்படி மனது வந்தது என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தை காக்க முயன்ற தொண்டர்களை,ஓ.பன்னீர்செல்வத்துடன் வந்த கும்பல் ஒன்று தாக்கியது.இதில் காயமடைந்த தொண்டர்கள் 25 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் புகக்கூடும் என கூறி ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தும், காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றார்.

சீல் வைக்கபட்ட அதிமுக அலுவலகத்தை திறக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டதாகவும், மீன் பாடி வண்டியில் கற்களை கொண்டு வந்து வீசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் உயரிய பொறுப்பான ஒருங்கிணைப்பாளர் பதவியிலும், துணை முதலமைச்சர் பொறுப்பிலும் அமர வைத்த தொண்டர்களை தாக்க எப்படி ஒருவருக்கு மனது வரும் என்று ஓ.பன்னீர் செல்வத்திற்கு, எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments