40 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிமாற்றம் செய்த மல்லையா.. ரூ.2000 ஆயிரம் அபராதம் - 4 மாதங்கள் சிறைத் தண்டனை..!

0 1422
40 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிமாற்றம் செய்த மல்லையா.. ரூ.2000 ஆயிரம் அபராதம் - 4 மாதங்கள் சிறைத் தண்டனை..!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இந்திய வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்ற நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தனது குழந்தைகளுக்கு பரிமாற்றம் செய்தார் விஜய் மல்லையா.

இந்த தகவலை நீதிமன்றத்துக்கு தெரிவிக்காத வழக்கில், அவருக்கு உச்ச நீதிமன்றம் 4 மாதங்கள் சிறைத் தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

மேலும், 40 மில்லியன் அமெரிக்க டாலரை வட்டியுடன் 4 வாரங்களுக்குள் திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments