நீட் தேர்வு : இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

0 909

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் உள்பட நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments