விபரீத பல் டாக்டர் தோழியுடன் கைது..! கிளினிக் நடத்துவதே இதுக்கு தானாம்..!

0 9582
விபரீத பல் டாக்டர் தோழியுடன் கைது..! கிளினிக் நடத்துவதே இதுக்கு தானாம்..!

சென்னையில் விவாகரத்தான பெண்ணுக்கு வாழ்வு தருவதாக கூறி சீரழித்து வீடியோ எடுத்து மிரட்டிய பல் மருத்துவரையும், கூட்டாளியான பெண் டாக்டர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை காமாட்சி ஆஸ்பத்திரி அருகில் கிறிஸ்டல் பல் மருத்துவமனையை நடத்தி வருபவர் டாக்டர் நிஷாந்த் ரவிசந்திரன். இவர் மீது கணவனை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.

அதில் பிரபல பல் டாக்டராக சமூகத்தால் அறியப்பட்ட நிசாந்த் ரவிச்சந்திரன், தனக்கு மருத்துவர் செரின் மூலம் அறிமுகமானதாகவும், தான் கணவரைப் பிரிந்து வாழ்வது போல் அவரும் மனைவியைப் பிரிந்து வாழ்வதால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதாகவும் கூறி உள்ளார்.

அவரது கிளினிக்கில் வைத்தும், தனியாக வீடு எடுத்து தங்க வைத்தும் அந்த பெண்ணிடம் தனது இச்சையை தீர்த்துக் கொண்ட டாக்டர் நிஷாந்த், டிரக்ஸ் எடுத்துக் கொண்டு அந்தப்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது. இதற்கு பெண் மருத்துவர் செரினும் உடந்தையாக இருந்துள்ளார்.

நாளுக்கு நாள் சைக்கோ டாக்டர் நிஷாந்தின் பாலியல் சித்ரவதைகள் எல்லை மீறியதால் கடும் மன உளைச்சலுக்குள்ளான அந்த பெண் நிஷாந்துக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அந்த பெண்ணை அடித்து உதைத்ததோடு, தாங்கள் எடுத்து வைத்திருக்கும் ஆபாச படங்களை வெளியிடுவோம் என்று மிரட்டிய நிலையில் அந்தப் பெண் சில வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்துள்ளார்

காவல் துறையினர் நிஷாந்த் குறித்து விசாரித்த போது இவர் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 4 விதவை பெண்களிடம் திருமணம் செய்வதாக கூறி அவர்களிடம் பணம் பொருள் பெற்று கொண்டு தினமும் drugs எடுத்துக் கொண்டு அவர்களிடம் வலுக்கட்டாயமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்தி கொலை செய்வதாக மிரட்டி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து டாக்டர் நிசாந்த், அவரது டாக்டர் தோழி செரின் மற்றும் கூட்டாளி கார்டிக் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவருடைய அனைத்து சட்டத்துக்கு புறம்பான செயலுக்கும் உடந்தையாக செயல்பட்டதால் தோழியான பெண் டாக்டர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் டாக்டர் நிஷாந்த் ரவிசந்திரனால் வேறு எதேனும் பெண்கள் பாதிக்கபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments