ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் மூழ்கி உயிரிழப்பு.!

0 845

தஞ்சை கும்பகோணம் அருகே திருமலை ராஜன் ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கும்பகோணத்தில் உள்ள எருத்துக்கார தெருவை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஹரிராஜன், ஐயங்கார் தெருவை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் பிரசன்னா ஆகியோர் விடுமுறை தினத்தையொட்டி தனது நண்பர்களுடன் திருமலை ராஜன் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது அரைகுறையாக மட்டுமே நீச்சல் தெரிந்திருந்த அவர்கள் இருவரும் ஷட்டர் அருகே ஆழம் அதிகமுள்ள பகுதிக்கு சென்றபோது மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது.

மாணவர்களின் நண்பர்கள் உறவினர்களை வரவழைத்து இருவரது உடல்களையும் மீட்ட நிலையில் அவற்றை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து பட்டீஸ்வரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments