ஜெயலலிதாவின் சகோதரர் எனக்கூறி ஜெயலலிதாவின் சொத்துகளில் பங்கு கோரி 83 வயது முதியவர் மனு தாக்கல்.!

0 1269

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீத பங்கு தரக்கோரி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மைசூரின் வியாசர்புரத்தை சேர்ந்த 83 வயது முதியவர் வாசுதேவன். தனது தந்தை இரண்டாவதாக திருமணம் செய்த வேதவள்ளியின் மகள் ஜெயலலிதா, தனக்கு சகோதரி எனவும், ஜீவானம்சம் கேட்டு தனது தாய் தொடுத்த வழக்கில் வேதவள்ளி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர் மனுதாரர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தீபா, தீபக் மட்டுமே ஜெயலலிதாவின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments