பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு.. முன்னேற்பாடுகள் தீவிரம்..!

0 962

சென்னை வானகரத்தில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஸ்ரீவாரு திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் மெட்ரோ ரயில் நிலையங்கள் போல், கியூ.ஆர். கோட் சோதனை செய்யும் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

உறுப்பினர்களுக்கு நவீன நுட்பத்தில் அடிப்படையில் அடையாள அட்டை வழங்கப்பட்ட நிலையில், அதனை ஸ்கேன் செய்ய அந்த எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல், மண்டப வளாகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செலவத்தின் படங்கள் பேனர்களில் இடம்பெறவில்லை என அவரது அதரவாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments