கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி ரவுடி கொடூரமாக கொலை.. காரணம் என்ன.?

0 1903

ராணிப்பேட்டை அருகே, போலீசார் எனக்கூறி அழைத்துச் சென்று ரவுடியை கை, கால்களை துண்டு துண்டாக வெட்டிக் கொடூரமாக கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கூத்தம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயதான சரத்குமார் என்ற ரவுடி மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. முன்விரோதம் காரணமாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சரத்குமாரை கொலை செய்யும் முயற்சி நடைபெற்றதாகவும் இதில் தப்பித்த சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு இவரது வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தாங்கள் திருவள்ளூர் காவல்நிலைய போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, விசாரணைக்கு அழைத்து வரச் சொன்னதாக கூறி சரத்குமாரை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இரவு முழுவதும் சதீஷ்குமார் வீடு திரும்பாத நிலையில், காலையில் புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள மயானம் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments