அமர்நாத்தில் திடீர் மேக வெடிப்பை தொடர்ந்து பெய்த கனமழை - பெருவெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி..!

0 847
அமர்நாத்தில் திடீர் மேக வெடிப்பை தொடர்ந்து பெய்த கனமழை - பெருவெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி..!

ஜம்மு-காஷ்மீர் அமர்நாத்தில் திடீர் மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழை பெருவெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்த நிலையில், அமர்நாத் யாத்ரீகர்களை மீட்கும் பணியில் நவீன உபகரணங்களுடன் ராணுவம் களமிறங்கியுள்ளது.

அமர்நாத் குகைக் கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க சென்றவர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். 109 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் சிறப்பு மீட்பு உபகரணங்களுடன் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments