கழுதைன்னா இளக்காரமா ? துன்புறுத்திய ராஸ்கல் காலை கடித்து தூக்கிய கழுதை யார்..!

0 2697
போதையில் கழுதை ஒன்றை கயிறு கட்டி இழுத்துச்சென்று அடித்து உதைத்த புள்ளீங்கோ இளைஞரை அந்த கழுதை காலை கடித்து இழுத்துச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

போதையில் கழுதை ஒன்றை கயிறு கட்டி இழுத்துச்சென்று அடித்து உதைத்த புள்ளீங்கோ இளைஞரை அந்த கழுதை காலை கடித்து இழுத்துச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

கழுதை ஒன்று தன்னிடம் வம்பிழுத்த தற்குறிக்கு செமத்தியாக பதிலடி கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

கழுதை ஒன்றை கயிறுகட்டி ஊருக்கு ஒதுக்கு புறமாக இழுத்துச் சென்ற, முடிக்கு வர்ணம் பூசிய புள்ளிங்கோ இளைஞர் ஒருவர் அதனை கடுமையாக தாக்கி உள்ளார்.

தான் கழுதையை அடித்து உதைப்பதை கூட்டாளியை வைத்து வீடியோ எடுத்து தனது வீர தீர பராக்கிரமத்தை கழுதையிடம் காட்டி உள்ளார்.

எட்டி மிதிக்கும் போது படக்கென்று புள்ளீங்கோ இளைஞரின் காலை கடித்த கழுதை தான் யார் என்பதை காட்டியது.

அவரது காலை கடித்து இழுத்து தூக்கியபடி கழுதையார் சுற்றிவர் வீடியோ எடுத்த கூட்டாளி அங்கிருந்து தப்பி ஓடி தூரத்தில் இருந்து இந்த பதில் அடி சம்பவத்தை படம் பிடித்துள்ளார்.

சும்மா போன கழுதையை பிடிச்சி வம்பிழுத்தால் அது என்ன மாதிரி பதில் அடி கொடுக்கும் என்று இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரங்களின்றி வைரலாகி வருகின்றது.

அண்மையில் 247 கிலோ மீட்டர் ஓவர் ஸ்பீடில் பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய டிடி.எப் வாசனுக்கு ஆதரவாக, சிலர் கழுதைக்கு தெரியுமா டிடி.எப் வாசனை என்று கேட்டிருந்தனர்.

அப்படி தெரிந்தால் டிடி.எப் வாசனுக்கு என்ன மாதிரி நிலை வரும் என்று கலாய்த்து இந்த காணொளியை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments