கலவர பூமியான கொழும்பு.! கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்.!

0 1730
இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிபர் மாளிகை முழுவதும் முற்றுகையிடப்பட்டதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிபர் மாளிகை முழுவதும் முற்றுகையிடப்பட்டதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இலங்கை நாட்டில் வரலாறு காணாத அளவில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, எரிபொருள், மின்சாரம், அத்தியாசியப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, ஆளும் அரசை கண்டித்து அந்நாட்டு மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். அவர் பதவியேற்றது முதல் நிலைமையை மேம்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், எரிவாயு, அத்தியாவசிப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

இதனை தொடர்ந்து மீண்டும் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்த மக்கள், கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி கொழும்புவிற்கு இன்று காலை முதல் பேருந்து, ரயில் மற்றும் கண்டெய்னர் லாரிகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

போராட்டக்காரர்களை தடுக்கும் வகையில் சிறப்பு அதிரடிப் படையினர் அமைந்திருந்த தடுப்புகளை உடைத்தெறிந்து அதிபர் மாளிகைக்குள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்தனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் வன்முறை வெடித்தது.

ஆம்புலன்சில் கோத்தபயா ராஜபக்சே தப்பித்து செல்வதாக தகவல் வெளியான நிலையில், அதிபர் மாளிகையில் இருந்து வெளியே வந்த ஆம்புலன்சை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். அதில் முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறி போராட்டக்காரர்களிடம் இருந்து மீட்டு அனுப்பிக்கப்பட்ட நிலையில், அந்த ஆம்புலன்ஸில் கோத்தபயா, தனது குடும்பத்தினருடன் தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக, அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்டனர். எதிர்க்கட்சி எம்.பி. ரஜிதா சேனரத்னாவை போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கினர். ரத்த காயமடைந்த அவரை போராட்டக்காரர்களிடம் இருந்து போலீசார் பத்திரமாக அழைத்து சென்றனர்.

இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது குடும்பத்தினரோடு, ராணுவ தலைமையகம் அருகே அமைந்துள்ள விமான நிலையம் வழியாக தப்பிக்க முயற்சித்ததாக கூறப்படும் நிலையில், கப்பலில் தப்பிச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட, சபாநாயகருக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கோத்தபய ராஜபக்சே, அதிபர் பதவியிலிருந்து விலகக்கோரி, அவரின் சொந்த கட்சியான இலங்கை பொதுஜன பெரமனுவின் 16 எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

முன்னதாக, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறும் காலி சர்வதேச ஸ்டேடியத்தை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்தனர். மேலும், அதிபர், பிரதமருக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், ராணுவ அதிகாரிகள், வீரர்கள் என பாதுகாப்புப் படையினர் பலரும் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கொழும்புவில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில், அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி பல்வேறு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனை அடுத்து அறிவிப்பு வெளியிட்ட ரணில், நிலையான அரசு தொடரவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.

மேலும், அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி அரசு அமைய வழிவிட்டு இம்முடிவு எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகைக்குள் முற்பகலில் நுழைந்த போராட்டக்காரர்கள், பிரதமர் ரணில் இல்லத்திற்குள்ளும் நுழைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments