அனைத்து வகையான தேசியக் கொடிகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தகவல்..!

0 1358
அனைத்து வகையான தேசியக் கொடிகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தகவல்..!

இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட பாலிஸ்யடர் தேசியக் கொடிகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட தொடக்கத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் மூவர்ணக் கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக இயந்திரத்தில் உருவாக்கப்படும் பாலியஸ்டர் துணியால் உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடிகளுக்கும் அனுமதி அளித்து இந்திய தேசியக் கொடி-2002 சட்டத்தில் மத்திய அரசு கடந்த டிசம்பரில் திருத்தம் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.t

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments