உக்ரைன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு பதக்கங்கள்.. அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்து ஆறுதல்..!

உக்ரைன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு பதக்கங்கள்.. அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்து ஆறுதல்..!
ரஷ்ய இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் வீரர்களை அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
கிழக்கு உக்ரேனிய நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அதிபர் ஜெலன்ஸ்கி, அவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
டான்பாஸ் பிராந்தியத்தின் லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதுமாக கைப்பற்றிய ரஷ்ய படைகள், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.
Comments