அமர்நாத் மேகவெடிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 48 பேர் மீட்பு..!

0 749
அமர்நாத் மேகவெடிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 48 பேர் மீட்பு..!

ஜம்மு காஷ்மீர் அமர்நாத்தில் திடீர் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.

அமர்நாத் குகைக்கோவிலில் பனி லிங்க சிவனை தரிசிக்க சென்றவர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

48 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், குகை அருகே உள்ள மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளத்தால் நிலச் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 6 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments