தமிழ் உள்பட 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு..!

0 1463
தமிழ் உள்பட 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு..!

பொன்னியின் செல்வன் படத்தை எம்ஜிஆர் தங்களுக்காக விட்டு வைத்துச் சென்றிருப்பதாக என இயக்குனர் மணிரத்தினம் தெரிவித்தார்.

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாக டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, தமிழ்நாட்டில் இதுவரை கொண்டு வரப்பட்ட பல அரசுத் திட்டங்கள் சோழர்கள் காலத்திலேயே வகுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

பொன்னியின் செல்வன் படத்தில் பழுவேட்டரையராக சரத்குமாரும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

 

எம்ஜிஆர் காலத்திலேயே வெளிவந்திருக்க வேண்டிய இப்படம் ஏதோ காரணத்திற்காக நின்றுவிட்டதாகவும், படத்தின் கதை மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இயக்குநர் மணிரத்னம் தெரிவித்தார்.

படத்தின் டீஸரை தமிழில் நடிகர் சூர்யா, தெலுங்கில் மகேஷ் பாபு, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் மோகன்லால், ஹிந்தியில் அமிதாப் பச்சன் ஆகியோர் வெளியிட்டனர்.

வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இப்படத்தின் முதல் பாகம் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments