வீட்டை விட்டு ஓடிவர மறுத்த இளம் பெண் கத்தியால் குத்தி கொலை..! வெறிபிடித்த பாய் பெஸ்டீ..!

0 4260
வீட்டை விட்டு ஓடிவர மறுத்த இளம் பெண் கத்தியால் குத்தி கொலை..! வெறிபிடித்த பாய் பெஸ்டீ..!

மதுரையில் வீட்டை விட்டு ஓடிவரமறுத்த திருமணம் நிச்சயமான பெண்ணை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உள்ளது. பாய் பெஸ்டியின் ஒரு தலை காதலால் நிகழ்ந்த பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

மதுரை, பொன்மேனி பகுதியில் உள்ள குடியானவர் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரது 19 வயது மகள் அபர்ணா. சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த அபர்ணாவை மர்ம நபர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டான்.

கொலையாளியை தடுக்க முயன்றும் முடியாததால் அபர்ணாவின் தாய் கத்தி கூச்சலிட்டதால், அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டனர். சம்பவம் குறித்து எஸ் .எஸ் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் அபர்ணாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தால் நிகழ்ந்த படுகொலை சம்பவம் என்பது தெரியவந்தது.

அபர்ணா பிளஸ் டூ படித்து வந்த போது விராட்டிபத்து கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த போது அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளதாகவும், அந்த இளைஞர் அபர்ணாவை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அபர்ணாவை திருமணம் செய்து கொள்ள அவர் வீட்டிற்கு ஹரிஹரன் பெண் கேட்டு வந்த நிலையில் அபர்ணாவின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளனர் .

இதனை தொடர்ந்து ஹரிகரனுடன் பேசுவதை அபர்ணா நிறுத்திக் கொண்ட நிலையில் வருகிற ஆகஸ்ட் 23-ம் தேதி முனீஸ்வரன் என்பவருடன் அபர்னாவுக்கு திருமணம் நடத்த கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஏற்கனவே பெண் கொடுக்க மறுத்த ஆத்திரத்தில் இருந்த ஹரிஹரனுக்கு , வேறு மாப்பிள்ளைக்கு அபர்ணாவை திருமணம் செய்ய நிச்சயித்த தகவல் கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் இருந்த அபர்ணவை சந்தித்த ஹரிகரன், தன்னிடம் சிரித்து பேசியது எல்லாம் பொய்யா? தன்னை காதலிக்கவில்லையா? என்று கேட்டு அபர்ணாவிடம் வாக்குவாதம் செய்துள்ளான் ஹரிஹரன், நம் காதல் உண்மை என்றால் இப்பவே வா, நாம் ஓடிப்போயிடலாம் என அழைத்துள்ளார்.

அபர்ணா , அவருடன் செல்ல மறுத்துள்ளார். அங்கு வந்த அபர்ணாவின் தாய் அவனை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன போது, ஆத்திரம் அடைந்த ஹரிகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபர்ணாவை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தப்பி ஓடிய ஹரிஹரனை காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காதலன் ஹரிஹரன் இன்று கைது செய்யப்பட்டார். தனக்கு கிடைக்காத இந்த பெண் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற நோக்கத்தினால் குத்தி கொன்றதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments