அரசுப் பள்ளியில் பயிலும் 19 மாணவர்ளுக்கு கொரோனா தொற்று.. பள்ளிக்கு 2 நாள் விடுமுறை அறிவிப்பு.!

0 835

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஒரே பள்ளியில் பயிலும் 19 மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் பள்ளி மூடப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களில் சிலருக்கு சளி, காய்ச்சல் இருந்த நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 19 மாணவர்களுக்கும், பெற்றோர்களில் 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதோடு, பள்ளியிலும் மாணவர்கள் வசிக்கும் இடங்களிலும் நோய்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments