'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்திற்குரிய டீசர் வெளியீடு.!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்திற்குரிய டீசர் வெளியாகி உள்ளது.
கல்கியின் வரலாற்று புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட அப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அரண்மனைகள், போர்க்களக் காட்சிகள் போன்றவை இடம்பெற்றுள்ள படத்தின் டீசர் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.
Comments