தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து... 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0 3820

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. சென்னை -  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுப்பேடு என்ற இடத்தில் அதிவேகமாக சென்ற பேருந்து, இரும்பு கம்பி ஏற்றி சென்றுச் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் பேருந்து முழுவதுமாக சேதமடைந்த நிலையில், 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பேருந்தின் ஓட்டுநர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments