மிகக் கனமழைக்கான 'ரெட் அலர்ட்'... எச்சரிக்கும் வானிலை மையம்

0 1766

மகாராஷ்டிரத்தில் தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்றதையடுத்து, மும்பையில் 4-ஆவது நாளாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மும்பை, தானே, புனே மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர் கனமழையால், முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அம்மாநிலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மும்பை தெற்கு கொங்கன், கோவா மற்றும் தெற்கு மத்திய மகாராஷ்டிராவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்திருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments