கட்டுப்பாட்டை இழந்து மின்மாற்றியில் மோதிய பேருந்து தீக்கிரையாகி விபத்து.!

கடலூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்த நிலையில், விபத்துக்குள்ளான பேருந்து தீக்கிரையானது.
விருத்தாச்சலத்திற்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து குள்ளஞ்சாவடி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் வந்த நிலையில், அதனை இடித்துச்சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்மாற்றி மீது மோதியது.
இதனை அடுத்து பேருந்தில் தீப்பற்ற தொடங்கியபோது அதிலிருந்த பயணிகள் உடனடியாக வெளியேறினர். தீ மளமளவென பரவிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் அதனை கட்டுப்படுத்தினர். பேருந்து மோதியதில் விபத்திற்குள்ளான இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
Comments