ப்ரி மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதல் வெளியீடு.!

மத்திய அரசு கொண்டுவந்த மாற்றங்களின் அடிப்படையில் ப்ரி மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன் படி, 9 மற்றும் 10ஆம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்களும், 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதார பணியாளர்களின் பிள்ளைகளும் உதவித்தொகை பெற தகுதியடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் தொலைபேசி எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்றும் ஆதாருடன் இணைந்த வங்கிக்கணக்குக்கே கல்வி உதவித்தொகை அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments