பயங்கரமாக தீப்பிடித்து எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம்.. ஜன்னல் வழியாக குதித்தவர்களை தாங்கிப்பிடித்து காப்பாற்றிய போலீசார்..!

0 1494
பயங்கரமாக தீப்பிடித்து எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம்.. ஜன்னல் வழியாக குதித்தவர்களை தாங்கிப்பிடித்து காப்பாற்றிய போலீசார்..!

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள மேடிசன் நகரில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் சிக்கிக்கொண்டவர்களை போலீசார் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பத்திரமாக மீட்டனர்.

படிகள் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அதன் வழியாக வெளியேற முடியாமல் மேல் தளத்தில் தவித்த குழந்தைகளும், அவர்களது குடும்பத்தினரும் ஜன்னல் வழியாக கீழே குதிக்க குதிக்க அவர்களை கீழே இருந்தவாறு பிடித்து போலீசார் மீட்டனர்.

இந்த காட்சிகள் அதிகாரி ஒருவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த பாடி கேமிராவில் பதிவாகி உள்ளன. தீவிபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments