அதிக பாரத்துடன் சென்றதால் மண்சரிவு ஏற்பட்டு குளத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் நீந்திக் கரையேறி உயிர்தப்பினார்..!

0 1012
அதிக பாரத்துடன் சென்றதால் மண்சரிவு ஏற்பட்டு குளத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் நீந்திக் கரையேறி உயிர்தப்பினார்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குறுகிய பாதையில் ஜல்லி லோடு ஏற்றிச் சென்ற லாரி பாரம் தாங்காமல் அங்கிருந்த குளத்தில் கவிழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது.

தனுவச்சபுரம் பகுதியில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணிக்காக இந்த லாரி ஜல்லிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் இருக்கும் குளத்தை ஒட்டியுள்ள ஒரு குறுகிய சாலையில் டிரைவர் லாரியை இயக்கியுள்ளார்.

மழையால் குளத்தின் சுற்றுசுவர் சேதமடைந்திருந்த நிலையில், அதிக பாரத்துடன் லாரி சென்றதால் அந்த சுற்றுசுவர் சரிந்து சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, லாரி குளத்தில் கவிழ்ந்தது.

நீச்சல் தெரிந்திருந்ததால் லாரி டிரைவர் நீந்திக் கரையேறி உயிர்தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments