4 வாகனங்களை திருடி தப்ப முயன்ற நபர்.. 2 மணி நேரத்தில் பிடித்த போலீசார்.!

0 743

அமெரிக்காவில் 4 வாகனங்களை திருடி தப்ப முயன்ற நபரை 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்.

வடக்கு கரோலினாவில் ஜீப் ஒன்று திருடு போனதாக கிடைத்த தகவலை அடுத்து சந்தேகத்தின் பேரில் சார்லட்- மெக்லன்பர்க் போலீசார் சாலையில் ஒருவரை துரத்த தொடங்கினர்.

அப்போது அதிவேகமாக ஜீப்பில் சென்ற அந்த நபர், சார்லட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து கார்கள் உள்ளிட்ட 3 வாகனங்களை திருடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலையோர நடைபாதைகளிலும் லாவகமாக சென்று போலீசாருக்கே சவால் விடுத்தார்.

விடாமல் போலீசார் துரத்திச்சென்ற நிலையில், இறுதியாக தெற்கு சார்லட்டில் கார் ஒன்றின் மீது மோதிய பின்னர் அந்த இளைஞர் தானாகவே சரணடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments