"தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

0 1189
"தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், இன்றும், நாளையும் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அம்மையம் கணித்துள்ளது.

லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சூரியனை விட்டு அதிக தூரம் பூமி செல்வதால் அதிகப்படியான குளிர் வரும் நாட்களில் உணரப்படும் என பரவும் செய்தி உண்மை அல்ல என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments