லஞ்சம் வாங்கிய புகாரில் பவர்கிரிட் காப்பரேஷன் நிர்வாக இயக்குநர் கைது.!

லஞ்சம் வாங்கிய புகாரில் பவர் கிரிட் காப்பரேஷன் நிர்வாக இயக்குநர் பி.எஸ்.ஜாவை சிபிஐ கைது செய்துள்ளது.
வடகிழக்கு இந்தியாவில் செயல்படுத்தப்படும் மின் திட்டங்களில் டாடா நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படும் வகையில் ஜா லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக காசியாபாத், நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 93 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில், ஜாவை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும் லஞ்சம் வழங்கியதாக 6 டாடா நிறுவன உயர் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments