கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்.!

புதுச்சேரியில், கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தனது மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.
அரியாங்குப்பத்தைச் சேர்ந்த தியாகராஜன் - பச்சைவாலி தம்பதிக்கு 7 வயதில் பெண் குழந்தையும், 3 வயதில் ஆண் குழந்தையும் இருந்தனர். வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டி வந்த தியாகராஜன், வாடகையை முறையாக செலுத்தாததால் ஆட்டோவை உரிமையாளர் திரும்பப் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக எலக்ட்ரீசியனாக கூலிக்கு வேலை செய்து வந்த தியாகராஜன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காலையில் உறவினர்களுக்கு போன் செய்த தியாகராஜன், தான் மன உளைச்சலில் இருப்பதாகவும் தாங்கள் அனைவரையும் அழைத்து செல்லும் படியும் கூறியுள்ளார். உறவினர்கள் வந்து பார்த்த போது, 4 பேரும் விஷமருந்திய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.
Comments