ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடக்கம்.. வீடுகள் இடிக்கப்படுவதை கண்டித்து மக்கள் தர்ணா போராட்டம்.!

சென்னை குரோம்பேட்டையில் சிட்லப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
சிட்லப்பாக்கம் ஏரியில் கட்டப்பட்டுள்ள 488 வீடுகளை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 200 போலீசார் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இன்று 2 வீடுகள் மட்டும் அகற்றப்பட்டன.
Comments