தமிழகத்தில் 20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு

0 1509

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உயர்கல்வித்துறை சார்பில் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதன் படி விருதுநகர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கல்லூரிகளை திறந்து வைத்த முதலமைச்சர், சுமார் 152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வகங்கள், தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றையும் திறந்து வைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments