உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்து... இரண்டு ஓட்டுநர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

0 1264

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு 40 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரும்பு கம்பிகள் குத்தி பேருந்து ஓட்டுநர் சிவா மற்றும் மாற்று ஓட்டுநர் சுருளிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்துக்கு பின்னால் வந்துகொண்டிருந்த கார் பேருந்து மீது மோதியதில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments