சானியா மிர்சாவின் விளையாட்டு பயணம் தோல்வியுடன் நிறைவு

0 1334

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் விளையாட்டு பயணம் தோல்வியுடன் முடிவடைந்தது.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் விளையாடும் இந்தியாவின் சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார். குரோஷியாவின் மேட் பெவிக்குடன் இணைந்து விளையாடிய சானியா மிர்சா, அமெரிக்காவின் டெசிரே கிராசிக் மற்றும் இங்கிலாந்தின் நீல் குப்ஸ்கி இணையிடம் தோல்வியடைந்தார்.

நடப்பு விம்பிள்டன் தொடருடன் ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்த சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் 3 முறையும், மகளிர் இரட்டையர் பிரிவில் 3 முறையும் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments