எனக்கு கிடைத்த நியமன எம்.பி பதவி விளையாட்டுத் துறைக்கு கிடைத்த அங்கீகாரம் - பி.டி.உஷா

0 1173

தனக்கு கிடைத்துள்ள நாடாளுமன்ற நியமன உறுப்பினர் பதவி விளையாட்டுத் துறைக்கும், தடகள வீரர்களுக்கும் கிடைத்த அங்கீகாரம் என முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.

சேலத்தில் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்த பி.டி.உஷா, தான் விளையாடி காலத்தில் இருந்ததை விட தற்போதைய அரசு விளையாட்டுத்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்து வருவதாக தெரிவித்தார்.

போட்டிகளில் வெற்றிபெற்று நாடு திரும்பும் வீரர்களை பிரதமர் சந்தித்து உற்சாகப்படுத்தி வருவது வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக  தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments