சிவசேனா எம்.பி.க்களும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு மாற திட்டம்..?

0 2534

சிவசேனாவைச் சேர்ந்த சில எம்.பிக்கள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியில் சேர இருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து மக்களவையில் கட்சியின் கொறடாவை மாற்றியது சிவசேனா தலைமை. பாவன காவாலி என்ற எம்.பி.தான் சிவசேனா அதிருப்தியாளர் - பாஜக கூட்டணிக்கு திட்டம் வகுத்து தந்ததாகக் கூறப்படுகிறது.

மக்களவையின் சிவசேனா கொறடாவான அவருக்கு பதிலாக தானே தொகுதி எம்பியான ராஜன் விச்சாரேயை நியமித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஷான் ஜோஷிக்கு சிவசேனா கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சிவசேனா அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments