ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் பாதுகாப்பானவை என அந்த நிறுவனம் உறுதி

0 1014

விமானப் பாதுகாப்பு தொடர்பாக தினசரி 30 சம்பவங்கள்  நிகழ்ந்தாலும், பயணிகளின் பாதுகாப்புக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

பருவநிலை, இயந்திரக் கோளாறு, பறவை மோதல், பயணியின் உடல் நல பாதிப்பு, வானில் வட்டமடித்தல் போன்ற பல்வேறு வகையான பிரச்சினைகள்  விமானப் பயணிகளின் உயிர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி வருகின்றன.

இதனிடையே ஒரே நாளில் இரண்டு ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஜய் சிங், ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் 15 ஆண்டுகளாக பாதுகாப்பான பயணத்தை அளித்து வருவதாகவும், விமானத்தின் மீது பறவை மோதுவது எந்தவொரு விமானத்துக்கும் ஏற்படக்கூடியதுதான் என்பதால் மிகைப்படுத்த வேண்டாம் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments