மருந்துக் கடைக்காரர் உமேஷ் கொலை வழக்கில் 13 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை..!

மருந்துக் கடைக்காரர் உமேஷ் கோலேஹ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேசியப் புலனாய்வு அதிகாரிகள் மகாராஷ்ட்ராவின் அமராவதி மாவட்டத்தில் 13 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இவ்வழக்கில் கைதான 7 பேர்களின் வீடுகளில் சோதனை நடத்திய அதிகாரிகள் மொபைல் போன்கள், சிம்கார்டுகள், மெமரி கார்டுகள் , மதரீதியான பகைமையைத் தூண்டும் பிரசுரங்கள், கத்திகள் மற்றும் சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த உமேஷ் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை என்.ஐ.ஏ.விசாரித்து வருகிறது.
Comments