பாகிஸ்தான் சதித் திட்டங்கள் ராணுவம் 33 பக்க அறிக்கை

0 1183

இந்தியா மற்றும் நாட்டு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் தீட்டிய தீவிரவாத சதித் திட்டங்கள் குறித்து 33 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ராணுவம் தயாரித்துள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களால் அண்டை நாட்டின் மீது நடைபெற்ற தாக்குதல்கள், தீட்டப்பட்ட சதித்திட்டங்கள் குறித்து இந்திய ராணுவம் தயாரித்துள்ள 33 பக்க ஆவணங்கள் பாகிஸ்தானின் திட்டங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

எல்லையில் ஊடுருவல் முயற்சிகள், மட்டுமின்றி பாகிஸ்தானில் சிறுபான்மைகளாக உள்ள இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் குறித்தும் அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் , ஆசிரியர்கள், பிறமாநிலத் தொழிலாளர்கள் மீது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்தும் அதில் விளக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியான படுகொலைகளுடன் இளைஞர்களை தீவிரவாதப் பயிற்சிக்கு மூளைச் சலவை செய்வதாகவும் பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எல்லைத் தாண்டி தீவிரவாதிகள் ஊடுருவிய போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டை, கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் பட்டியல், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் போன்ற விவரங்களையும் இந்திய ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரசு ஆதரவுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜிகாத் என்ற பெயரில் காஷ்மீர் மீது யுத்தம் தொடுத்து வருவதாகவும் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments